Seed Certification
விதை கிராமத் திட்டம்
விதை கிராமம்

முன்னுரை:


விதையே விவசாயத்திற்கு தொடக்கமாகும் மற்றும் இதர இடுப்பொருட்களின் உற்பத்திற்கு மூலகரமாகும். நல்ல தரமுள்ள விதை மட்டுமே 15 - 20 % உற்பத்தியை அதிகரிக்கும். 2025 ஆம் ஆண்டு நம் நாட்டில் 1.4 கோடி மக்களின் உணவுத் தேவைக்காக விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதுமட்டுமின்றி விவசாயிகள் அதிக திறன் உள்ள மேம்படுத்தப்பட்ட விதை இரகங்களை உற்பத்தி செய்வது முக்கியமானதொன்று.

இந்த விதைத் திட்டத்தில் மாநில அரசு, வேளாண்மைப் பல்கலைக்கழக முறைகள், பொதுத்துறை கூட்டுறவு மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றது. இந்த அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தினால், 15 - 20 % விதையின் தரத்தை உற்பத்தி செய்ய முடிகிறது. சில சமயங்களில் விவசாயிகள் பயிரிடுவதற்காக அவர்களின் பண்ணை விதைகளையே பயிர் உற்பத்திக்காக விதைக்கின்றனர். இதனுடன் விதைப்பதற்கு சில வழிமுறைகள் மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலான பயிர்கள் விற்பனைக்காக பயிரிடப்படுகிறது. இதில் சிறிய பங்கு விதைகளை தனியாக பிரித்தும், சேமித்தும் மற்றும் அடுத்து பருவத்திற்கு விதையாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விதைகள் எதிர்பார்த்த அளவிற்கு விதைத்திறன் கிடைக்காது.

உற்பத்தி திறனுக்கு நல்ல தரமுள்ள விதைகளை இடுப்பொருளாக பயன்படுத்தலாம். அடுத்தடுத்தக் காலங்களில் பழைய விதையைப் பயன்படுத்துவதனால் விதைகளின் தரம் குறைகிறது. எனவே புதிய விதைகளை மாற்றி பயன்படுத்த வேண்டும். எப்பொழுதும் கலப்பின விதைகளை வருடத்திற்கு ஒருமுறையும் மற்றும் கலப்பின மற்ற விதைகளை 3 முதல் 4 வருடத்திற்குள் மாற்றம் செய்ய வேண்டும். எனவே விதையின் மாற்ற விகிதத்தை அதிகரிக்க விதையின் தரத்தை முன்னேற்ற வேண்டும்.

இருப்பினும் ஒருங்கிணைந்த விதைத் திட்டத்தின் மூலம் 15% வரைதான் விதை மாற்றம் விகிதம் அடைந்துள்ளது. இதனால் நல்ல தரமுள்ள விதைகளின் தேவை மற்றும் விநியோகத்திற்கு நடுவில் நீண்ட இடைவேளை அமைந்துள்ளது. இந்திய விதை நிறுவனங்களான தனியார் விதை நிறுவனங்கள் மட்டுமே விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திலி சிறந்து விளங்குகின்றது. ஆனாலும் இன் நிறுவனங்களில் குறைந்த அளவிளான அதிக விலையுள்ள விதைகளை உற்பத்தி செய்வதினால் சில விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படுகிறது.

இன்னும் பொது துறைகளில் நெல் ரகங்கள், எண்ணெய் வித்து மற்றும் பயிறு வகைகள் போன்றவற்றை குறைந்த விலையில் அதிகளவில் விநியோகம் செய்கின்றனர். குறைவான விதை மாற்று விகிதம் காரணம், நல்ல தரமுள்ள பயிறு வகை மற்றும் எண்ணெய் வித்து விதைகள் இல்லாததே முக்கிய காரணமாகும். எனவே இந்த வகையான பயிறுகளை அதிகமாக உற்பத்தி செய்தால் நல்ல தரமுள்ள விதைகளை விநியோகம் செய்யலாம்.
Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam